Welcome to YVO Ministries
இயேசுவே வழியும் ஒளியுமானவர் ஊழிய (YVO Ministries) விபரம்
(Details of Jesus is the way and the light Ministries)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காண்பித்துக்கொடுத்த தரிசனத்தின் அடிப்படையில் இவ்வூழியம் நடைபெற்றுவருகிறது. 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் ….. அன்று கர்த்தர் கொடுத்த வார்த்தையின் அடிப்படையில் ஊழியத்தை ஸ்தாபிக்க முடிந்தது.
மேலும் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அற்புதங்களை செய்தவர் என்பது மட்டுமல்லாது இன்றும் நம்மிடத்தில் அற்புதங்களை செய்து வருகிறார் என்பதற்கு அநேக சான்றுகள் உண்டு. அதில் ஒன்று இவ்வூழியத்தின் ஸ்தாபகர் திருமதி.ஹெனரின் ஷீபாவுக்கு இருந்த கிட்னி பாதிப்பிலிருந்து கர்த்தர் அற்புத சுகத்தை கொடுத்து சாட்சியாக வைத்துள்ளார்.
இவ்வூழியமானது ஆரம்பத்தில் ஜெபக்குழுவாக ஆரம்பிக்கப்பட்டு, ஜெபத்தின் விளைவாக தற்போது கீழ்கண்ட ஊழியங்களை செய்யும்படிக்கு கர்த்தர் கிருபை செய்துள்ளார். அதோடு அநேக வாலிபர்களை கூட்டி சேர்த்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தும் பொருட்டு ஒரு சேனையாக எழுப்பியுள்ளது கர்த்தருடைய சுத்த கிருபையே.